2025 ஜூலை 05, சனிக்கிழமை

தாயின் கழுத்தை அறுத்த தனயன் கைது

Freelancer   / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலிலுள்ள குமாரவேலிய கிராமத்தில் தனது தாயாரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்த 45 வயதான மகனைக் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், குமாரவேலிய கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பொன்னுத்துரை தவமணி என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த தாயார் அவரது மகளுடன் வாழ்ந்துவரும் நிலையில், சம்பவதினமான இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தாயாரின் வீட்டுக்கு சென்ற மகன், தாயாரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கேட்டு சண்டை பிடித்துள்ளார்.

தாயார் சங்கிலியை கொடுக்க மறுத்துள்ளார், மகனுக்கும் தாயாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அங்கிருந்த கத்தியால் தாயாரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து  மகனைக் கைது செய்ததுடன், சம்பவ இடத்திற்கு நீதவான் சென்று சடலத்தை  பார்வையிட்டதன் பின்னர் வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .