2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

‘தார்மீக பொறுப்புடன் செயற்படவும்’

Freelancer   / 2021 நவம்பர் 08 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து தார்மீக பொறுப்புடன் செயற்படுமாறு, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அரசாங்கத்துக்கு அறிவுரை வழங்கினார். 

பெரிய எதிர்பார்ப்புடன் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், இன்று விவசாயிகள் வீதியில் நிற்கிறார்கள். உரப் பிரச்சினை,கேஸ் இல்லை, அத்தியவசிய பொருள்களின் விலை கட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

கந்தளாயில் நேற்று முன்தினம் (06) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது, ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “சீனி மற்றும் அரிசி விலை உயர்வு எல்லாமே பிரச்சினைகளாகத்தான் இருக்கின்றன. ஊடகங்களை திறந்தால் மக்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, வீதிக்கு இறங்கியதைக் காண முடிகிறது.
“ஆசிரியர்கள், அதிபர்களும் இவ்வாறு நியாயமான முறையில் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வைக் கோருகிறார்கள்.

“இவற்றைத் தீர்த்து வைப்பதில் அரசாங்கத்துக்கு தார்மீக பொறுப்பு உள்ளது. எனவே, அரசாங்கம் இதனை தீர்த்து வைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .