2025 மே 02, வெள்ளிக்கிழமை

திங்களன்று அடுத்த சுற்று பேச்சுவார்த்தை

Freelancer   / 2021 ஜூலை 24 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கல்வி அமைச்சருக்கும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை திங்கட்கிழமை (26) காலை கல்வி அமைச்சில் நடைபெறும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை எடுக்கும் முடிவுகள் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர்  தெரிவித்தார்.

செயல்முறைப் பரீட்சைகளில் இருந்து ஆசிரியர்கள் விலகினால், அவர்கள் சமூகத்திலிருந்து பல்வேறு களங்கங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்ட அவர், அனைத்து ஆசிரியர்களும் இந்த நேரத்தில் மாணவர்களின் கல்வி குறித்து உணர வேண்டும் என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .