Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செயனவிரத்ன
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று (27) கண்டிக்கு விஜயமொன்றை மேற்கொள்ள தீர்மானித்திருந்த நிலையில், திடீரென இந்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
சீனத் தூதுவர் நேற்று மாலை 4.30 மணியளவில் மல்வத்து- அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்திருந்த நிலையில், நேற்று மாலை 3.30 மணிக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் மல்வத்து- அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு தீர்மானித்திருந்தார்.
எனினும் இறுதி நேரத்தில் அச்சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில், கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரிடம் வினவியபோது, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே திடீர் சுகயீனமடைந்ததால், இச்சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .