Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 05 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேரவாத பௌத்த சமயத்தை இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பாதுகாக்கும் வகையில் புனித திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதை முன்னிட்டு, இன்று (05) அரச நிறுவனங்கள், விகாரைகள், வீடுகளில் பௌத்த கொடியை காட்சிப்படுத்துமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
பெளத்தர்களால் பெரிதும் மதிக்கப்படும் திரிபீடகத்தை, இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் தேசிய நிகழ்வு சங்கைக்குரிய மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்றைய தினம் முற்பகல் மாத்தளையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த அலுவிகாரையில் இடம்பெறவுள்ளது.
ஆயிரக்கணக்கான வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த பௌத்த சமயத்தை உலக மக்களுக்கும், எதிர்கால தலைமுறைக்கும் மிகச் சரியாக பாதுகாத்து பேணும் நோக்குடன், மகா சங்கத்தினரின் ஆலோசனை, வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகின்றது.
சுத்தபீடகம் (பேருரைப்பகுதி) அபி தம்ப பீடகம் (உன்னத கோட்பாட்டு பகுதி), வினைய பீடகம் (நன்னடத்தை கோட்பாட்டுப் பகுதி) ஆகிய 3 பீடகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தத் திரிபீடகம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மஹிந்த தேரரின் வருகையினால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற பேறாகவும் மரபுரிமையாகவும் திகழ்வதுடன், இவ்வாறு கிடைக்கப்பெற்ற பௌத்த சமயம் அரச கௌரவத்தை பெற்று பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வளம்பெற்று வந்துள்ளது. மகா சங்கத்தினரால் பல நூற்றாண்டுகளாக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பாதுகாக்கப்பட்டு வந்த திரிபீடகம் உலகில் முதல் முறையாக முதலாவது கிறிஸ்து வருடத்தில் மாத்தளை அலுவிகாரையில் ஆவணப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்று நிகழ்வுக்குப் பின்னர் 1956ஆம் ஆண்டு விசேட திட்டமாக திரிபீடகம் முழுமையான நூலாக அச்சிடப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இதுவாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025