J.A. George / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த இன்று(17) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா முன்னதாக அறிவித்திருந்தார்.
இதன்படி, வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியிருந்தார்.
இதேவேளை, பதிவு திருமணத்தை நடத்துவதாயின் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நேற்று தெரிவித்திருந்தார்.
இதன்படி, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும் என அவர் கூறியிருந்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago