Freelancer / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் கோரிக்கைக்கமைவாக அனைத்துலக மருத்துவ நல அமைப்பு(IMHO-USA) மற்றும் இரட்ணம் பவுண்டேசன்(Ratnam Foundation-UK) அமைப்புக்களினால் முதலாம் கட்டத்தில் பன்னிரண்டு பாடசாலைகளிலும் இரண்டாம் கட்டத்தில் ஒன்பது பாடசாலைகளிலும் திறன் பலகையுடனான திறன் வகுப்பறைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் இரண்டாம் கட்டத்தில் வழங்கப்பட்ட ஒன்பது பாடசாலைகளில் பெரியவிளான் றோ.க.த.பாடசாலையில் திறன்வகுப்பறையை திறந்து வைக்கும் நிகழ்வு சென்ற வாரம் மிகச்சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் திறன்பலகை தொடர்பாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களினால் , மாணவர்களுடனான பங்குபற்றுதலுடன் வகுப்பறைச் செயற்பாடுகள் மிகவினைத்திறனான முறையில் நிகழ்த்தி காட்டப்பட்டிருந்தது.
e class,white board,g compries மென்பொருட்களுடன் e thksalawa,NIE,DP போன்ற வலய அமைப்புக்களை பயன்படுத்தியது மட்டுமன்றி செயற்கைநுண்ணறிவு தொடர்பாக பயிற்சியின்போது வழங்கப்பட நுட்ப விடயங்களையும் தமது வகுப்பறைச் செயற்பாடுகளில் இவ் ஆசிரியர்கள் இணைத்திருப்பது முக்கியம்சமாகும்.
இவ் ஆரம்ப நிகழ்வுகளில் வலயபிரதிநிதிகளுடன், பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன் IMHO-USA அமைப்பின் வதிவிட பணிப்பாளர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .