2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணம் : சுட்டவர் சரண்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 02 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பின்னர் துப்பாக்கியுடன் ஹூங்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X