Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 13 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
துயிலுமில்லத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கோரியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் அதன் வளாகத்துள் தங்குமிடங்கள் அமைத்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நினைவு தின நாட்களிலும் பொது நினைவேந்தல் தினத்திலும் தங்களின் கவலைகள் தீர நினைவு கொள்ள முடியாது துன்பப்படுகின்றனர்.
யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் கடந்தும் நினைவேந்தலில் பூரண சுதந்திரம் கிடைக்காமல் பல்வேறு இராணுவ கெடுபிடிகளுக்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அவதியுறுகின்றனர். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைவாக நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கிருந்தாலும் பூரண சுதந்திரம் உண்டு என கூறுகின்ற போதும் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் நினைவேந்தல்கள் செய்ய பல்வேறு வடிவங்களில் இராணுவமும் பொலிஸாரும் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் நினைவேந்தலை உரிய இடத்தில் தங்களது பிள்ளைகள் அல்லது உறவினர்களின் உடல்கள் விதைக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடங்களில் அனுஷ்டிப்பதற்கு கோப்பாய் , கொடிகாமம் , எல்லங்குளம் போன்ற மாவீரர் துயிலுமில்லங்களில் தங்குமிடங்கள் அமைத்து இருக்கின்ற இராணுவத்தினரை வெளியேற்றி மக்களின் நினைவேந்தலுக்கு வழிவிட மாவட்ட செயலாளர் விரைந்து மாவட்ட அபிவிருத்திக் குழுவில் தீர்மானமாக எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago