2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

துருக்கியின் கல்வி அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

Janu   / 2025 ஜூலை 24 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின் 3வது அமர்வில் பங்கேற்க துருக்கி குடியரசின் கல்வி அமைச்சர் யூசுப் டெக்கின் உள்ளிட்ட குழு வியாழக்கிழமை (24) காலை நாட்டிற்கு வந்தார்.

அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் வரவேற்பு முனையத்தில் வைத்து வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு துணை அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்தன வரவேற்றார். இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதர்  செமி  லுட்ஃபு  டர்குட்டு இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 வர்த்தக அமைச்சின் கீழ் உள்ள வணிகத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு வியாழக்கிழமை (24) கொழும்பில் நடைபெற உள்ளது, மேலும் இதனூடாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத நாடாக இலங்கையின் பணிகளை பாராட்டிய துருக்கி கல்வி அமைச்சர், இலங்கையின் வளர்ச்சிக்கு துருக்கி நீண்ட காலமாக ஆதரவளித்து வருவதாகக் கூறினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துருக்கிய அரசாங்கம் நீண்ட காலமாக அளித்து வரும் ஆதரவை பிரதி அமைச்சர் ஆர்.இ. ஜெயவர்தன பாராட்டினார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வந்த துருக்கிய கல்வி அமைச்சருடன், அந்த நாட்டிலிருந்து உயர்மட்ட வணிகக் குழுவொன்றும் வந்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X