2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘துறைமுக நகரத்தை எதிர்த்தவர்களுக்கு வௌ்ளை வானை அனுப்பவில்லை’

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஜனவரி 16 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

துறைமுக நகரத்திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளமையானது  நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியென நினைத்து, இந்தத் திட்டத்துக்காக எவரையும் ஒடுக்காமல், இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை வௌ்ளை வானில் தூக்காமல், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒருவர் மீதாவது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்புகைத் தாக்குதலை மேற்கொள்ளாமல் அனைவருடனும் கலந்துரையாடலை முன்னெடுத்து மிகவும் சுமுகமாக இந்தத் திட்டத்தை ஆரம்பிக்க முடிந்ததென, மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்காக கடலை மணலால் நிரப்பும் நடவடிக்கைகளிள் ஒரு கட்டப் பணிகளின் முதலாம் கட்ட நிறைவு தின நடவடிக்கைகள் இன்று (16) மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சேய்ன் சுயேங், போர்ட் சிட்டி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பியேங் ஹவுலியேங் தலைமையில் இடம்பெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .