2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தூபி மீதேறிய மாணவர்கள்: விடுதலை செய்ய பேச்சுவார்த்தை

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்வது தொடர்பாக  வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன், அமைச்சர் ரிஷாத் பதியுதீன், எதிர்வரும் 28ஆம் திகதி பேசவுள்ளதாக, அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன், அலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் மாணவர்கள் தவறுதலாக இவ்வாறான செயலை மேற்கொண்டு இருப்பதால், மாணவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அனுராதபுர பொலிஸ் உயர் அதிகாரிகளுடனும் பேசிய அமைச்சர்,  மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களை விடுதலை செய்ய ஆவண செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .