2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தூபிக்குள் பூஜை ; ஐவர் கைது

Janu   / 2024 ஜூலை 14 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருவலகஸ்வெவ, எகொடபிட்டிய பிரதேசத்தில் ஆயிரம் வருடங்கள் பழமையான தூபியொன்றுக்குள் விளக்கு ஏற்றி பூஜை செய்து புதையல் தோண்டுவதற்கு முயற்சி செய்த ஐவர் சனிக்கிழமை (13) மாலை  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கருவலகஸ்வெவ பொலிஸ் உத்தியோகத்தர்களும், வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 40, 50, 52, 56 வயதுடைய நவகத்தேகம, கொபேய்கனே, நிகவெரட்டிய மற்றும் வாரியபொல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த சுற்றிவளைப்பின் போது 65 வயதுக்கு மேற்பட்ட சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அந்த இடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், விளக்கு உட்பட பூஜை பொருட்களுடன், நூல், சந்தனக்குச்சி, தூபம் , அலவாங்கு, மண்வெட்டி போன்ற பொருட்களுடன் கடல் மணலும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் , சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X