2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தென் அமெரிக்காவில் வலுவான நில அதிர்வு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் அமெரிக்காவில் இன்று 7.5 மெக்னிடியூட் அளவிலான வலுவான நில அதிர்வு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆழிப்பேரலை அபாயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் அமெரிக்காவின் தெற்கு முனைக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் அமைந்துள்ள நீர் நிலையான டிரேக் கடல் பெருவழியில் நில அதிர்வு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, நில அதிர்வு 8.0 மெக்னிடியூட் அளவில் பதிவானது, ஆனால் பின்னர் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் அதை 7.5 ஆகக் குறைத்தது. 

சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X