2025 ஜூலை 10, வியாழக்கிழமை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அழுத்தம்

Editorial   / 2018 நவம்பர் 03 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் மேலும் விருத்தியடைந்து இலங்கையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

என​வே, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் கடற்பிரயாணங்களை மேற்கொள்ளும் மீனவர்களும், திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைக்கமை செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .