2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தெமட்டகொடை சமிந்தவின் உறவினர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 18 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினரான தெமட்டகொடை சமிந்தவின் உறவினர் ஒருவர், ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தே நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை பிரதேசத்தில் இருந்து சீதுவைக்கு ஓட்டோவில் ஹெரோய்ன் பொதைப்பொருளை கொண்டு சென்ற போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 8400 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர், சீதுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .