Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 20 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட உத்தேச அங்கத்துவ பெயர்பட்டியல் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளினால் பரிந்துரைக்கப்பட்ட இந்த உத்தேச பெயர்பட்டியலுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அனுமதி பெறப்படவுள்ளது.
எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, கடந்த அமர்வின் போது, கட்சி தலைவர்களை கேட்டுக் கொண்டார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவானது, சபாநாயகரின் தலைமையில், கட்சி தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் அடங்கலாக நாடாளுமன்றத்தினால் பெயரிடப்பட்ட 17 உறுப்பினர்களை கொண்டதாகும்.
சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன், ஜோன்ஸ்ட்ன் பெர்ணான்டோ, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த சமரசிங்க, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித அபேகுணவர்தன ஆகிய 9 பேர், நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கு பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்க்கட்சியை சேர்ந்த லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோன் அமரதுங்க, விஜித ஹேரத், ரிஷாட் பதியூதின்,சம்பிக்க ரணவக்க,மனோ கணேஷன், நிரோஷன் பெரேரா, மாவை சேனாதிராஜா, ஆகியோரின் பெயர்களும் நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களுக்காக, பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago