Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 ஜூன் 13 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் பல குற்றங்களில் ஈடுபட்ட பின்னர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் மரணமான 'தெல்பாலா' என்றழைக்கப்படும் கருப்பையா பாலேந்திரன் என்பவரின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள அவரிடமிருந்து 50 கிராம் ஹெராய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. கருப்பையா நிர்மலா (41) என்றழைக்கப்படும் அப்பெண், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பல குற்றங்களில் ஈடுபட்டுள்ள தெல் தெல்பாலா, சட்டத்தில் இருந்து தப்பிக்க நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக வசித்து வந்தார்,
அங்கு அவர் இன்றைக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்பட்டிருந்த நிலையில் மரணமடைந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago