2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தெஹிவளை குடியிருப்பாளர் பதிவு உடன் நிறுத்தப்படும்: அமைச்சர் மனோ

Editorial   / 2018 டிசெம்பர் 28 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தில், தெஹிவளை பொலிஸ் வலயத்தில் குடியிருப்பாளர் பதிவை உடன் நிறுத்த நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் கிரிஷாந்தவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இனி அங்கு பதிவு நடவடிக்கைகள் நடைபெறாது. சிங்களத்திலோ, தமிழிலோ எந்த மொழியில் படிவங்கள் வந்தாலும் படிவங்களை எந்த மொழியிலும் நிரப்பி கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதைமீறி பொலிஸ் அதிகாரிகள் உங்கள் இருப்பிடங்களுக்கு வருவார்களாயின், 077312770 என்ற இலக்கத்துக்கு குறும்செய்தி அனுப்பி, விவரத்துடன் தன்னிடம் புகார் செய்யுமாறும் அமைச்சர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .