Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 பெப்ரவரி 06 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான தெங்குப் பயிர்செய்கைக் காணிகள் உட்பட, பல காணிகளை அபகரித்து இந்த நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த நாட்டின் அரசபடைகளே உள்ளதாக தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட எம்.பி.யான துரைராசா ரவிகரன் குற்றம் சாட்டினார்.
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் அபகரித்துள்ள மக்களின் பூர்வீகக் காணிகளில் அதிகளவு தெங்குப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பளையும், அக்காணிகளின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்ட ரவிகரன் எம்.பி. குறித்த காணிகள் இராணுவத்தின் பிடியிலிருந்து உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தேங்காய் ஏற்றுமதிசெய்வதற்கு இடையூறுகள் காணப்படுகின்றன. குறிப்பாக வடக்கு, கிழக்கில் மக்களுக்குச்சொந்தமான காணிகளை படையினர் இன்னமும் விடுவிப்புச் செய்யப்படவில்லை. புதிய ஆட்சியின்பின்னர் வடக்கு ,கிழக்கில் ஒருசில இராணுவமுகாம்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதிலும் இன்றளவில் பலநூற்றுக்கணக்கான ஏக்கர்நிலங்கள், மக்களின் வாழ்வாதார நிலங்கள் படையினரின் வசமே உள்ளன .
9 hours ago
9 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
23 Aug 2025