Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kamal / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் தேசிய ஒற்றுமை சிதைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள தேசிய சுதந்திர முன்னணி, நாளை (03) குறித்த பகுதிகளை நேரில் சென்று ஆராயவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
மேற்படி விவகாரம் தொடர்பில், தமது கட்சிக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைபாடுகளை மையப்படுத்தி, முல்லைத்தீவின் வெலிஓய, ஜனகபுர, மரதோடிய உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று ஆராயவுள்ளதாக குறித்த கட்சியினர் அறிவித்துள்ளது.
ஜனகபுர பகுதியிலிருந்து சிங்கள மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாகவும், மரதோடிய பிரதேசத்தில் 450 இந்திய குடும்பங்களை குடியமர்த்தியுள்ளதாகவும் முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பிரகாரம், கட்சியின் பிரதித் தலைவர் ஜயந்த சமரவீர, பேச்சாளர் மொஹமட் முஸம்மில், பத்ம உதயசாந்த எம்.பி உள்ளிட்டோர் முல்லைத்தீவுக்கு, நாளை செல்லவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago