Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.நிரோஸ்
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதையே, ஐக்கிய அமெரிக்காவின் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் எடுத்துரைத்திருக்கிறார் எனத் தெரிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணி, நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொள்ளாது, நல்லாட்சி அரசாங்கம் எடுக்கும் தவறான முடிவுகளாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், சீனக் கடற்படைத் தளமாகும் என, ஐக்கிய அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பில் நேற்று (07) வினவியபோதே, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானாந்த அளுத்கமகே, தமிழ் மிரருக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்ய வேண்டாம் என, ஒன்றிணைந்த எதிரணியினர் வீதியில் இறங்கிப் போராடினோம். ஆனால் அரசாங்கம், எங்களது பேச்சுகளைக் கண்டுகொள்ளாது, சீனாவுக்கு ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை விற்பனை செய்தது” எனத் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பில் வினவியமைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்துவிட்டதெனவும், பிரதமரின் தவறான பொருளாதாரக் கொள்கையே, நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணம் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago
1 hours ago