2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

’தேர்தலில் பின்னர் வருவது நல்ல நேரம் இல்லை’

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத்தேர்தலின் பின்னர் நாட்டில் நாட்டில் உதயமாக போது நல்ல நேரம் அல்ல என, மக்கள் விடுதலை முன்னியின் தலைவர் அநுர கமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிப்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் அங்கு கூறுகையில், “தேர்தலின் பின்னர் நாட்டில் ஏற்படபோவது சிறந்தவொரு நிலை அல்ல என்பதை இப்போதே காட்டியுள்ளனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்ள முடியாது. 

2010ஆம் ஆண்டு யுத்தத்துக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற போதும், பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சுபதவி மற்றும் பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கினர்.

இந்தமுறையும் அவ்வாறான ஒரு நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோருவது, நாட்டில் தற்போது வெற்றிக்கொள்ளப்பட்டுள்ள ஜனநாயகத்தை இல்லாது செய்வதற்காகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .