2025 மே 01, வியாழக்கிழமை

தேவை அதிகரிப்பால் ஒட்சிசன் இறக்குமதி

Freelancer   / 2021 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா சிகிச்சையை எளிதாக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் 100 மெற்றிக் தொன் ஒட்சிசனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளுக்கான நாளாந்த ஒட்சிசன் தேவை 70-72 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, சிங்கப்பூரில் இருந்து ஒட்சிசனை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500ஐத் தாண்டியுள்ளன என்று சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .