Editorial / 2019 டிசெம்பர் 03 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

“வலி. வடக்கு தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினர் விகாரை அமைக்கும் பணிகளை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும்” என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும், அரசியல்வாதிகளும் குறித்த விகாரை அமைப்பதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “வலி. வடக்கு தையிட்டிப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கரை ஆக்கிரமித்து புதிய விகாரை ஒன்றினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபைக்கு எழுத்து மூலமான முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் குறித்த விகாரையை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவம் மிக மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இதனை சட்ட ரீதியில் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026