2025 ஜூலை 05, சனிக்கிழமை

தொழிலாளர்களின் சம்பள விவகாரம்; திலகர் எடுத்துள்ள நடவடிக்கை

Editorial   / 2019 ஜனவரி 07 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சனையை முன்னிறுத்தி "சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை" ஒன்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜினால் நாளை(08) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட உள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் சமூகப் பிரச்சினையாக மேல் எழுந்துள்ள நிலையில் தொழில் அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு உள்ளிட்ட அரசாங்க தரப்பு தமது தலையீட்டினை மேற்கொண்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தியே மேற்படி பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் குறித்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றவுள்ளார். கடந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நாளில் இத்தகைய ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டத்துறை நிர்வாக முறைமையை மறுசீரமைக்க கோரும் தனிநபர் பிரேரணை ஒன்றையும் எதிர்காலத்தில் கொண்டுவரவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .