2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

தொழுகையில் ஈடுபட்ட 50 பேர் சுயதனிமை

S. Shivany   / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகக்கவசம் அணியாது கம்பளை நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 50 பேரை, சுயதனிமைக்கு  உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழுகையில் ஈடுபட்டோரில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக  அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கம்பளை- நாவலப்பிட்டி வீதி பகுதியில் வசிப்போரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட 25 பேருக்கே சுகாதாரப் பிரிவு அனுமதி வழங்கியுள்ளபோதிலும் விதிமுறைகளை மீறி இவ்வாறு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .