Editorial / 2025 ஒக்டோபர் 28 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஓபத்த வீரபன பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலதிபர் தம்பதியினரின் வீட்டிற்குள் திங்கட்கிழமை (27) நுழைந்த நபர் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தம்பதியினரைத் தாக்கி, அவர்களைப் பலத்த காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக ஓபத்த பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்ய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தம்பதியினரின் மகனால் சந்தேக நபரின் மகன் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
படுகாயமடைந்த பெண் மாத்தறை பொது மருத்துவமனையிலும், அவரது கணவர் உடுகம அடிப்படை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .