Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்பதிவுத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள 12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டையை, வாக்காளர்கள் அனைவரும் தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை, தேர்தல்கள் செயலகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
அதனடிப்படையில், http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx என்ற இணையத்தளத்துக்குச் சென்று, அதிலிருக்கின்ற 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை கிளிக் செய்யவும்.
அதில் உள்ள கட்டங்களில், தற்போது நீங்கள் பயன்படுத்தும் ஒன்பது இலக்கங்களுடன் ஆங்கில எழுத்து மற்றும் நிர்வாக மாவட்டத்தைத் தட்டச்சுச் செய்யவும்.
உங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கத்தை சரியாகப் பதிவு செய்தால், 12 இலக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதுவரை காலமும், ஒருவர் பிறந்த ஆண்டின் இறுதி 2 இலக்கங்களே, அடையாள அட்டையின் தொடக்கமாக இருந்த நிலையில், தற்போது 4 இலக்கங்களும் சேர்க்கப்பட்டே, இந்த 12 இலக்கங்கள் பெறப்பட்டுள்ளன.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago