2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நோட்டீஸ் கிடைத்தால் மன்றுக்கு வருகைதரவும்

Gavitha   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற உத்தரவை அவமதித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 17 பேரையும், நோட்டீஸ் கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி வருகைதந்தார். அவர், சமுகமளிக்கும் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவையும் மீறி, நீதிமன்றத்தை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதில், பௌத்த தேரர்கள் ஒன்பது பேரும் இருக்கின்றனர்.
இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைத்த, இந்த வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகாரவை, எதிர்வரும் 18ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X