2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நாடு திரும்பினர் மஹிந்த குழுவினர்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவுக்கு ஒரு வார உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த, முன்னாள் ஜனாதிபதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இணைந்த எதிரணியின் உறுப்பினர்கள், இன்று வியாழக்கிழமை (01) காலை, நாடு திரும்பியுள்ளதாக, விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிவிவகார முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், எம்.பி லொஹான் ரத்துவத்த மற்றும் எம்.பி உதித்த லொகுபண்டார ஆகியோரையும் உள்ளடக்கிய இக் குழுவினர், கடந்த நவம்பர் மாதம் 23ஆம் சீனாவுக்குப் பயணித்திருந்தனர்.
 
சீன அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பிதலின் பேரிலேயே, இவர்கள் சீனாவுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .