2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நாணயங்களைக் கடத்த முயற்சித்த சிங்கப்பூர் பிரஜை கைது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக ஒருதொகை வெளிநாட்டு நாணயங்களைக் கடத்த முயற்சித்த 47 வயதுடைய சிங்கப்பூர் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

இவரது பயணப் பொதியிலிருந்து 42 ஆயிரம் யூரோ, 37 அமெரிக்க டொலர், 27 ஆயிரம் ஸ்ரேலிங் பவுன் மற்றும் 45 இலட்சம் இலங்கை ரூபாய் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

இவற்றின் மொத்தப் பெறுமதி, 2,22,78,000 ரூபாய் என சுட்டிக்காட்டியுள்ள சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X