2025 மே 21, புதன்கிழமை

நீதிமன்ற செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளவில்லை

Kogilavani   / 2015 நவம்பர் 27 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற, நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான சுதந்திரமான சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாக காணப்படுவதாகவும் கடந்த 10 மாதகால தனது ஆட்சியின்போது நீதிமன்ற செயற்பாடுகளில் எந்தவிதமான அரசியல் தலையீட்டினையும் மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும் சர்வதேச நீதிமன்றத்தின் உப- தலைவருமான சீ.பி.வீரமந்திரி, தனது 50 ஆண்டு கால தொழில்சார் வாழ்வினை பூர்த்தி செய்வதை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்நாட்டுக்கு சீ.பி.வீரமந்திரி போன்ற நீதியரசர்கள் அதிகமதிகம் இன்று தேவைப்படுவதாகவும் எமது சட்டம் மற்றும் நீதிமன்றத் துறையில் உள்ள அனைவருக்கும் அவர் சிறந்ததோர் முன்மாதிரியாக உள்ளார் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நீதித்துறையில் வருடாந்த ,டமாற்றம் தொடர்பாக நிலவும் குறைபாடுகளை தீர்ப்பதற்காக சட்டத்தரணிகள் சங்கம் தலையிட்டு குறித்தொதுக்கப்பட்ட நியமங்களை தயாரிக்க முடியுமென தான் நம்புவதாக தெரிவித்த ஜனாதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனத்தின்போது இனிமேல் ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் தெரிவு செய்யப்பட மாட்டார்கள் எனவும், அதற்குத் தேவையான பிரமாணங்களை தயாரிக்கும் பொறுப்பினை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நிறைவேற்ற முடியுமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X