2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

நிதியமைச்சே முன்னிலையில்

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2015ஆம் ஆண்டில், நிதி அமைச்சினாலேயே, அதிகளவு அமைச்சரவைப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன என்று, தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சினாலேயே, குறைந்தளவிலாள அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை அலுவலகம் தெரிவிக்கின்றது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஜனாதிபதியினால் 24, பிரதமரினால் 67, பாதுகாப்பு அமைச்சினால் 47, கொள்கை, பொருளாதார விவகாரங்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார விவகார அமைச்சினால் 55 பத்திரங்களும், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பொது நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கான அமைச்சினால் 66, நிதியமைச்சினால் 103, நகர அபிவிருத்தி, நிர்வழங்கள் மற்றும் வடிகாலமைச்சு அமைச்சினால் 61, சுகாதார அமைச்சினால் 73 அமைச்சரவைப் பத்திரங்களும், அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இக்காலப்பகுதியில், மிகக்குறைந்தளவிலான அமைச்சரவைப் பத்திரங்களை, கிராமிய பொருளாதார அபிவிரத்தி அமைச்சே சமர்ப்பித்துள்ளது. அவ்வமைச்சினால், 4 அமைச்சரவைப் பத்திரங்கள் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், கடந்த வருடத்தின் முதல் 8 மாதக் காலப்பகுதியில், 1,241 அமைச்சரவைப் பத்திரங்கள், அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று, அமைச்சரவை அலுவலகம் தெரிவித்தது.

அத்துடன், கடந்த வருடத்தில் மாத்திரம், திணைக்களங்களுக்கான பணிப்பாளர்களாக 53பேர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான நியமனக் கடிதங்கள், அமைச்சரவைச் செயலாளரினால் கையளிக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த வருடத்தில் மாத்திரம், அமைச்சரவை அலுவலகத்தை நடத்திச் செல்வதற்காக, 65,563,102 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதெனவும் மேற்படி அலுவலகம், மேலும் கூறியது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X