2025 மே 21, புதன்கிழமை

நான் தவறு செய்தேன்: மஹிந்த

Kanagaraj   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியாக நான் பதவிவகித்த காலத்தில், தன்னால் முன்னெடுக்கப்பட்ட சில விடயங்கள் தவறானவை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெறும் பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், புலம்பெயர்ந்த தமிழர்கள் (டயஸ்போரா) கேட்பதை எல்லாம் கொடுப்பது நல்லிணக்கம் இல்லை. அதேபோல தமிழ் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் மீண்டும் சிந்திக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .