2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நான் நம்பவில்லை

Kogilavani   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

2004ஆம் ஆண்டு சுனாமி வருவதாக அறிவித்தபோது, அலரிமாளிகையிலேயே நானிருந்தேன். கரையைநோக்கி கடல் வருவதாகக் கூறியபோது அதனை நான் நம்பவில்லை என்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

'அலரிமாளிகையில் நான் இருந்தபோது, கரையைநோக்கி கடல் வருவதாகத் தெரிவித்தனர். நகைச்சுவை சொல்லவேண்டாம் என்று நான் சொன்னேன். மாத்தறையில் இடம்பெறவிருந்த வைபவமொன்றுக்கு, வாகனத்தில் நான் செல்லவிருந்தேன் என்று கூறினால், யாரும் நம்பமாட்டார்கள்' என்றார்.  பிரதமராக இருந்த நான், அவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்தேன்.

'ஹம்பாந்தோட்டை தங்காலை பிரதேசத்துக்கு சென்ற நான், அங்கு ஏற்பட்டிருந்த பாரிய அனர்த்தங்களைக் கண்டேன்' என்றும் அவர் கூறினார்.
வீரகெட்டிய கொனதெரிய ஸ்ரீ விஹாரையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேபோல, நாடு, வரலாற்றில் முகம்கொடுத்திருந்தவை நாட்டில் பலரும், தலைவர்களும் மறந்துவிட்டனர் என்றும், சுதந்திரம் எவ்வாறு கிடைத்தது என்பதனையே மறந்துவிட்டனர் என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X