2025 மே 21, புதன்கிழமை

நாய் படுக்கும் படுகையில்: தாய் படுத்திருந்த பரிதாபம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாய் படுக்கும் படுக்கையில் சில நாட்கள் படுத்திருந்த தன்னை, தன்னுடைய நான்கு பிள்ளைகளும் தவிக்கவிட்டுவிட்டனர் என்று, அவர்களுடைய 88 வயதான தாயொருவர் கலேவெல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாணந்துறை தெற்கு மாதுபிட்டியவைச் சேர்ந்த தாயே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். தனக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர் என்றும், அவர்களில் வங்கியில் கடமையாற்றும் மகன், தன்னைத் தவிக்கவிட்டுவிட்டதாகவும் அத்தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிய பயணிக்கும் பஸ்ஸில் தன்னை, நேற்று (14)ஆம் திகதி, அந்த மகன் ஏற்றிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ஏனைய மகன்மார் இருவரும் பொலிஸ் சேவையில் உள்ளனர் என்றும். மகள், ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றார் என்றும் தனது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாடிகளைக் கொண்ட வீடொன்றில் தடுத்து வைத்திருந்ததாக, நாய் படுத்துறங்கும் படுக்கையில் சில நாட்கள் படுத்திருந்ததாகவும் அத்தாய், தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .