Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களிலும் குளங்களிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக இடர்முகாமைத்துவ மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
பொலொன்னறுவை மாவட்டத்தில் பராக்கிரம சமுத்திரம், அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்கா சமுத்திரம் உட்பட 10இற்கும் மேற்பட்ட பாரிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் திறந்துவிடப்பட்டுள்ளதாக அரச இடர்முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்களும் குளங்களும் திறந்துவிடப்பட்டுள்ளதால் நீரேந்துப் பகுதிகளுக்கு அருகில் வாழும் குடியிருப்பாளர்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை,மட்டக்களப்பு – பொலொன்னறுவை நெடுஞ்சாலையில் மன்னம்பிட்டிய மற்றும் கல்லால்ல ஆகிய பகுதிகளிலும் மன்னார் - புத்தளம் சாலையிலும் வெள்ளம் ஏற்படும் நிலை காணப்படுவதாக இடர்முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
புத்தளம், மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான அறிக்கைகள் பதிவாகியுள்ளதாகவும் இடர்முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் குறிப்பிடுகின்றன.
வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மழையுடன் கூடிய கால நிலை இன்னமும் நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago
43 minute ago