2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நேர்மைக்குக் கிடைத்த பரிசு: மாரப்பன குறித்து மஹிந்த

Gavitha   / 2015 நவம்பர் 11 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, நேர்மையானவர் என்பதனால் அவர் உண்மையைக் கூறினார். அதற்காகவே அவருக்குப் பரிசு கிடைத்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

'அவர், உண்மையை கூறியமையால், அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அவர், தானாகவே இராஜினாமா செய்யவில்லை, இராஜினாமா செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திலக் மாரப்பன, மனசாட்சிக்கு ஏற்ப உரையாற்றினார். அதனால், அவன்ட் காட் கப்பல் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார். 'திலக் மாரப்பன நல்லவர். நேர்மையான பாத்திரம். ஆகையால் அவரது உரைக்கு பின்னர், அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு அவருக்கு அறுவுறுத்தல் வழங்கப்பட்டதா என்பது சந்தேகமாகும்' என்றும் அவர் கூறினார்.

'அவன்ட் காட் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் தெரிவிக்கின்றார் என்றால், நீதியமைச்சர் தெரிவிக்கின்றார் என்றால் அதற்கப்பால் வேறென்ன கதை? திலக் மாரப்பன நேர்மையானவர் என்று அவரது உரை உறுதிப்படுத்தியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .