2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நூலிழையில் தப்பியது அரசாங்கம்

Kogilavani   / 2016 மே 06 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்ற வாக்கெடுப்பில், நல்லாட்சி அரசாங்கம்
நூலிழையில் தப்பயது. நிதியமைச்சினால் கொண்டுவரப்பட்ட 5 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கான குறைநிரப்பி மீதான விவாதம் நேற்று இடம்பெற்றது.

விவாதம் நிறைவடைந்ததன் பின்னர் குறைநிரப்பி மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் ஜே.வி.பியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க, மாலை 5.40க்குக் கோரி நின்றார்.

அதன் பின்னர் கோரம் ஒலிக்கப்பட்டது. வெளியில் இருந்தவர்கள், சபைக்குள் படையெடுத்தனர். அவைக்கு தலைமைதாங்கிக் கொண்டிருந்த லக்கி ஜயவர்தன, வாக்கெடுப்பின் முடிவை அறிவிப்பதற்குத் தயாராகும் போது, இரு தரப்பினைச் சேர்ந்த இன்னும் சிலர், அவைக்குள் வந்து தங்களுடைய வாக்குகளையும் பதிந்துகொள்ளுமாறு கோரினார். இவ்வாறு மூன்று முறைகள் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் குறை நிரப்புப் பிரேரணைக்கு  ஆதரவாக 32 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X