Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2025 ஜூலை 09 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரிய பெரிய அரசியல் தலைவர்களை தனக்கு தெரியும் என்று ஆசைவார்த்தைக் கூறி, தன்னை நிகிதா ஏமாற்றியதாக செந்தில்குமார் புகார் அளித்துள்ளார்.
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.48 லட்சம் மோசடி செய்ததாக நிகிதா மீது சென்னையிலும் ஒரு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள கோயிலின் தற்காலிக காவலாளியாக இருந்த அஜித்குமார், போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 5 பொலிஸார் கைது செய்யப்பட்ட நிலையில், சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஆகஸ்ட் 20ஆம் திகதிக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில், அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது மறுபுறம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. அவர் மீது பல பண மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பல திருமண மோசடிகள் அவர் மீது இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், நிகிதா மீது செந்தில்குமார் என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், "2011ஆம் ஆண்டில் பெரிய பெரிய அரசியல் தலைவர்களை தனக்கு தெரியும் என்றும், அவர்கள் மூலமாக எளிதாக அரசு வேலை வாங்கி கொடுப்பதாகவும் நிகிதாவும், அவரது தாயாரும் என்னிடம் கூறினர்.
இதனால் எனக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு, நிகிதாவின் சகோதர் கவியரசு, தாயார் சிவகாமி ஆகியோரிடம் ரூ.48 லட்சம் பணத்தை நான் கொடுத்தேன். ஆனால், அரசு வேலை வாங்கித் தராமல் என்னை அவர்கள் ஏமாற்றிவிட்டனர்" என தனது புகார் மனுவில் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும், நிகிதா தன்னிடம் மோசடி செய்த பணம் ரூ.48 லட்சத்தை மீட்டுத் தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
38 minute ago
49 minute ago
52 minute ago