Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
நகர்ப்புறங்களில் முடங்கியுள்ள தொழிலாளர்களுக்கான தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தி, அவ்வாறானவர்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, வீட்டுவேலை தொழிலாளர் சங்கம் மற்றும் செங்கொடிச் சங்கங்களின் ஆலோசகர் மேனகா கந்தசாமி தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்று காரணமாக, தொடர்ச்சியாக ஊரடங்கு நிலை அமுல்படுத்தப்பட்டுள்ள சூழலில், நகர்ப்புறங்களில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள், குறிப்பாக வீட்டுவேலைத் தொழிலாளர்கள், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள், தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் வேலைத்தளங்களில் எவ்வித கொடுப்பணவுகளும் இன்றி முடங்கியுள்ளனர்.
அவர்களைப் பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய தலையாய பொறுப்பு, அரசாங்கத்துக்கு உள்ளது என்றும் இது தற்போதைய நிலையில் மிகவும் அத்தியாவசியமான தேவையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு, அரசாங்கம் ஒரு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தும் பட்சத்தில், தொழிலாளர்கள் அவ்விலக்கங்களினூடாகத் தொடர்புகொண்டு, தங்களது வீடுகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு இலகுவாக இருக்குமென்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
மேலும் இந்தத் தொலைபேசி இலக்கத்தை, தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில், ஊடகங்களில் தொடர் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் அதன்போது, தொழிலாளர்களின் சரியான விவரங்களை அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இருக்குமென்றும் பிரச்சினையான காலகட்டத்தில், இவ்வாறு முடங்கி கிடக்கும் தொழிலாளர்கள், குறைந்தபட்சம் தங்களுடைய உறவுகளுடன் ஒன்றாக இருக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, அவர் மேலும் கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago