2025 ஜூலை 30, புதன்கிழமை

நாடு திரும்பினார் நாமல்

Editorial   / 2025 ஜூலை 29 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் மாலைதீவு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, செவ்வாய்க்கிழமை (29)    காலை நாடு திரும்பினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக விற்பனைக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் ஓஷத மகா ஆராச்சி இந்த பிடியாணையை,  திங்கட்கிழமை (29) பிறப்பித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் குழுவும்   ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஒரு மனுவை இன்று (29) காலை சமர்ப்பித்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .