2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நடுநிசியில் ‌ரூ. 40 மில்லியன் கொள்ளை

Princiya Dixci   / 2016 நவம்பர் 29 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் புதிய பஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற நிதி நிறுவனமொன்றுக்கும் அதற்கருகிலுள்ள கட்டடப்பொருட்கள் விற்பனை நிலையத்துக்கும், ஞாயிற்றுக்கிழமை (27) நள்ளிரவில் நுழைந்துள்ள கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்து சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க ​நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.  

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதற்காக, நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேற்படி நிதி நிறுவனத்தின் காப்பகத்தில், 30 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க நகைகள் மற்றும் பணம் இருந்ததாக, பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், அதன் பெறுமதித் தொடர்பில், சரியாகக் கணக்கிடப்படவில்லை என்று, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், மேற்படி கட்டடப்பொருட்கள் விற்பனை நிலையத்தின் காப்பகத்தில், 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் காணப்பட்டதாகவும், அதுவும் கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .