J.A. George / 2025 நவம்பர் 17 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் வயது வந்தோரில் 12 முதல் 14 சதவீதம் பேர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 30 முதல் 40 சதவீதம் பேருக்கு தாங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரியாது என்றும், அதிக எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவ ஆய்வக சோதனைகள் போன்றவற்றுக்கான அறிவியல் தரவு அல்லது அறிவியல் முறைகள் இல்லாததுதான் நாட்டில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் உள்ள முக்கிய பிரச்சனை என, நிறுவனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் இலவச சுகாதார சேவையில் நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கான எந்த அமைப்பும் இல்லை என்றும், எனவே, தீவிரமாக பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் மற்றும் ஆபத்தில் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவ சிகிச்சையை நாடுவதாக அவர் கூறியுள்ளார்.
“அரச மருத்துவமனைகளில் பெரும்பாலான இரத்த பரிசோதனைகள் ஏற்கெனவே நீரிழிவு நோயாளிகளாக பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே இலவசமாக செய்ய முடியும், மேலும் நீரிழிவு நோய் வருவதற்கான அதிக ஆபத்தில் உள்ளவர்கள் அத்தகைய பரிசோதனைகளை இலவசமாகப் பெறுவது மிகவும் கடினம்.
எனவே, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, அத்தகைய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முறைக்கு அப்பால், நோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் முறைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
15 minute ago
21 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
2 hours ago
2 hours ago