Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 01 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகலரும் உறங்குவதற்குச் சென்றதன் பின்னர், இரவு நேரங்களில் மட்டும் காணாமல் போகும்இ மரப்பலகையிலான ஏணியொன்று, வாடகை வீட்டின் சுவருடன் சாய்த்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது.
அந்த ஏணியை, இரவு வேளையில் மட்டும் நடமாடும் ஏணியாக மாறிவிடுவதாக, ஏணிக்குச் சொந்தக்காரரான மாமா தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நடமாடும் ஏணியைப் பிடிப்பதற்கு, வீட்டிலிருந்தவர்களும் ஏனையோரும் ஒருநாள் உஷாரடைந்தனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள கிராமமொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில்
மேலும் தெரியவருவதாவது,
புதிதாகத் திருமணம் முடித்த இளம் ஜோடியொன்றுஇ அந்தக் கிராமத்தில் வாடகைக்கு வீடொன்றை எடுத்துத் தங்கியுள்ளது. அந்த வாடகை வீட்டைச் சுற்றி பல வீடுகள் உள்ளன. அந்த ஜோடியினரும் அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் அன்னியோனியமாகப் பழகிவந்துள்ளனர்.
ஒரு நாள், அண்டைய வீட்டைச் சேர்ந்த வயதான மாமா ஒருவர், 'தன்னுடை வீட்டுக்கு வெளியில் வைக்கப்பட்டிருக்கும் ஏணி, இரவு வேளைகளில் மட்டும் மர்மமாய் மாயமாகிவிடுகிறது' என ஒருவரிடம் கூறியுள்ளார்.
அதனடிப்படையில் தேடிப் பார்த்தால், இரவு வேளையில், மின்விளக்குகள் அணைக்கப்பட்டதன் பின்னர், இருட்டோடு இருட்டாக மறைந்துவரும் ஓர் உருவம், ஏணியுடன் தன்னுடைய வீட்டின் பக்கமாக வந்து செல்வதாக, அந்த நபர், மாமாவின் காதுகளுக்குப் போட்டுள்ளார்.
தேடிப் பார்த்தால், ஏணியைத் தூக்கிச் செல்லும் இளைஞன், திருமணமான ஒருவரென அறியமுடிகின்றது. ஒருநாள் மறைந்திருந்து பார்த்தபோது, மின்விளக்குகள் அணைக்கப்பட்டதும் வந்த அந்த இளைஞன், ஏணியைத் தூக்கிக்கொண்டு, வாடகைக்கு வீடெடுத்துத் தங்கியிருந்த இளம் ஜோடியினரின் அறையின் கூரையுடன் சாய்த்துவைத்து, கூரையின் மீதேறியுள்ளார்.
கூரையின் ஓடுகள் இரண்டை சத்தமின்றிக் கழற்றிவிட்டு, கூரையில் படுத்திருந்தவாறே, அறையை நோட்டமிட்டுள்ளார்.
விரைந்த செயற்பட்ட அங்கிருந்தவர்கள், அபாய கோஷமெழுப்பி ஊர் மக்களை ஒன்றுகூட்டி, அவ்விளைஞனைப் பிடித்து நையப்புடைத்தனர்.
30 Aug 2025
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Aug 2025
30 Aug 2025