Editorial / 2023 ஜூன் 01 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

நகைச்சுவை நடிகை ஜெயனி நடாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புருனோ திவாகரவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (01) உத்தரவிட்டுள்ளார்.
பௌத்த தத்துவம் மற்றும் கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக நடிகை ஜெயனி நடாஷா கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவினர் புருனோ திவாகரவை நேற்று (31) கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
“மோதாபிமான” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பௌத்த தத்துவத்திற்கு கேடு, அவமதிப்பு மற்றும் அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட சந்தேகநபர் நடாஷா எதிரிசூரியவின் வாக்குமூலத்தை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
17 minute ago
32 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago
35 minute ago