R.Tharaniya / 2025 ஒக்டோபர் 02 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த செவ்வாய்க்கிழமை (30) மாலை 45 வயதுடைய ஒருவர் தனது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி,அவர் நான்கு நாட்களாக ஹோட்டலில் தங்கியிருந்தார்.
அவரது அறையின் கதவு பூட்டப்பட்டு இருப்பதை ஹோட்டல் ஊழியர்கள் கவனித்தபோது, அவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் அதிகாரிகள் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கி இருப்பதைக் கண்டனர். பிரேதபரிசோதனையில் தூக்கில் தொங்கியதால் மரணம் நிகழ்ந்தது என உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கண்டியைச் சேர்ந்தவர். புதிதாக திறக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலில் கேசினோவில் சூதாட்டத்தில் பெரும் தொகையை இழந்த பிறகு இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago