2025 மே 15, வியாழக்கிழமை

நீண்ட தூர பேருந்து சேவை தொடர்பில் அறிவிப்பு

S.Renuka   / 2025 மே 15 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட தூர பேருந்து சேவைகளை இயக்குவதில் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க இலங்கை போக்குவரத்து சபை (SLTB) முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஆறு மணி நேரத்திற்கும் மேலான நீண்ட தூர சேவை பயணத்திற்காக இரண்டு டிப்போக்களை இணைத்து இரண்டு பேருந்துகளை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ஜீவக பிரசன்ன புரசிங்க தெரிவித்துள்ளார். 

நாட்டில் நடைபெற்று வரும் விபத்துக்கள் தொடர்பில் புதன்கிழமை (14) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவுகள் எட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

ரம்பொட, கெரண்டி எல்லாவில் ஏற்பட்ட பேருந்து விபத்து தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபை நடத்திய விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும் விபத்து குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவும் அதன் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் போக்குவரத்து சபை  தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விபத்து தொடர்பான மோட்டார் போக்குவரத்து ஆய்வாளரின் அறிக்கை மற்றும் இறந்த ஓட்டுநரின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பிற அறிவியல் அறிக்கைகள் நிறைவடைந்த பின்னர், இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்று குழுவின் தலைவர் மூத்த டிஐஜி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .