2026 ஜனவரி 07, புதன்கிழமை

நண்பனை காப்பாற்றியவரை இழுத்துச் சென்ற முதலை

Editorial   / 2026 ஜனவரி 06 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலை தாக்குதலில் இருந்து தனது நண்பனை காப்பாற்ற முயன்ற ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ள சம்பவம், அக்கரைப்பற்று, பெரியபள்ளக்காடு பகுதியில் உள்ள கல் ஓயா ஆற்றில்​ இடம்பெற்றுள்ளது.

ஒரு படகு எடுக்க ஆற்றின் குறுக்கே மற்றொருவருடன் நீந்தி சென்றுக்கொண்டிருந்தபோது, ​​தண்ணீரில் இருந்து வெளிவந்த ஒரு முதலை அவர்களில் ஒருவரை நோக்கி பாய்ந்து அவரை நீருக்கடியில் இழுத்துச் சென்றது.

இதனையடுத்து மற்றையவர் ஒரு தடியால் முதலையை  அடித்து தனது நண்பரைக் காப்பாற்றினார்.  சிறிது நேரம் கழித்து திரும்பிவந்த முதலை நண்பனை காப்பாற்றியவரை நீருக்கடியில் இழுத்துச் சென்றது.

பாதிக்கப்பட்ட ஏ.கே.ராமீஸ் (37) ஒலுவில் பகுதியைச் சேர்ந்தவர். காணாமல் போன நபரைத் தேட கடற்படை சுழியோடிகள் அனுப்பப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று காவல் நிலையப் பொறுப்பதிகாரி (ஓஐசி) சுனில் கமகே தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .